சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தனது சமூக ஊடகங்களில், ‘அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி காரணமாக தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகள் நடுக்கடலில் உள்ள துறைமுகத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் அவலநிலையைப் பார்ப்பது வேதனையளிக்கிறது.

மீனவர்கள் முதல் உள்நாட்டு வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரை கடல் உணவுத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய பாஜக அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா, அல்லது வழக்கம் போல் அவர்களைக் கைவிடுமா?