திருச்சி: உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோன் திரும்ப ஒப்படைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் தவறவிட்ட ஐபோனை திரும்ப ஒப்படைப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத 541 கிலோ 781 கிராம் எடையுள்ள தங்கத்தை முதலீடு செய்ய ஏதுவாக SBI வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.