சென்னை :ஆசிரியர் வேலைக்கு இனி போலீஸ் வெரிஃபிகேஷனை தமிழக அரசு கட்டாயமாக ஆக்கியுள்ளது.
ஆசிரியர், ஆசிரியர் அல்லாத வேலைக்கு போலீஸ் வெரிஃபிகேஷனை தமிழக அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.
இதுதொடர்பாக 2024இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் அது கட்டாயம் ஆக்கப்படவில்லை. இந்நிலையில், முதன்மை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட அரசாணையில், அது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.