நாமக்கல்: செல்போன் கடையில் திருடி விட்டு ஓசூர் தப்பிய 3 பேரை சாமர்த்தியமாக போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த குறுக்குபுரத்தில் மொபைல் ஃபோன் விற்பனைக் கடையின் பூட்டை உடைத்து 10 செல்ஃபோன்கள் மற்றும் ஐயாயிரம் ரூபாயை திருடி விட்டு ஓசூருக்கு தப்பிச் சென்று விட்டனர்.
அங்குள்ள பட்டாசுக் கடை ஒன்றில் வேலை பார்த்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். செல்ஃபோன் கடைக்காரர் தந்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கைதான அம்மூவரும் வேறு பல திருட்டுகளிலும் தொடர்புடையவர்கள் என கூறிய போலீசார், அவர்களிடம் இருந்த திருட்டு பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.