சென்னை: 25 செ.மீ மழை பதிவானாலும் கூட வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்காமல் தடுக்கப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கிண்டி ரேஸ் கோர்ஸில் உள்ள குளங்கள் நிரம்பினால் உபரிநீரை அடையாற்றில் கொண்டு சேர்க்கும் வகையில் திட்டமிட்டுள்ளன. பெருங்குடியில் 4 கோடி லிட்டர் அளவுக்கு சேமிக்கும் 2 குளங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் அறிவியல்பூர்வமான நடவடிக்கையால் வேளச்சேரியில் வெள்ளம் வராமல் தடுக்கப்பட்டது என தெரிவித்தார்.