சென்னை: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் 644 பேர் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ஜான் லூயிஸ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் காலியாக உள்ள 358 பணியிடங்களை நிரப்புவதற்கு ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நேர்காணலுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவு எண்களின் பட்டியலை இணையதளத்தில் பார்க்கலாம், என்றார்.