கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தால் முக்கிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் செய்யப்பட்டன.
கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே, ரெயில் விபத்து காரணமாக முக்கிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், சிதம்பரம் ரெயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் நடுவழியில் நிறத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.