கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பிறகு, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தவெக உறுப்பினர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் நேற்று முன்தினம் இரவு விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற விஜய் விரைவில் கரூர் செல்ல உள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி நிர்வாகிகளுடனும் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார்.