By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: விஜய் அரசியலும் ‘ஜனநாயகன்’ படமும் – சினிமா உலகை கலக்கும் இரட்டை அலை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > விஜய் அரசியலும் ‘ஜனநாயகன்’ படமும் – சினிமா உலகை கலக்கும் இரட்டை அலை
தமிழகம்

விஜய் அரசியலும் ‘ஜனநாயகன்’ படமும் – சினிமா உலகை கலக்கும் இரட்டை அலை

admin
Last updated: August 23, 2025 4:16 pm
By admin 2 Min Read
Share
SHARE

சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அவர் பேசிய “சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வரும்” என்ற வசனம் இன்னும் அரசியல் மேடைகளில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த மாநாட்டின் வெற்றிக்குப் பிறகு, தற்போது விஜய்யின் கடைசி படமாகக் கருதப்படும் ஜனநாயகன் பற்றிய செய்தி சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், விஜய்யின் சினிமா வாழ்க்கையின் கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கான சம்பளம் மட்டும் ரூ.275 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது. தெலுங்கில் வெளியான பகவந் கேசரி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. படத்தின் போஸ்டர் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் வந்துள்ளதால், இது முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் அமைந்த படம் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை.

பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய் அரசியலில் இறங்கிய பின், அவர் நடிக்கும் அரசியல் சார்ந்த படத்தை பார்க்க ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் நிலவுகிறது.

இதற்கிடையில், ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தயாரிப்பாளர்கள் மலேசியாவில் கிறிஸ்துமஸ் தினத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் கடைசி படமாக இருப்பதால், 20க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்க அழைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, அஜித், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களும் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி மற்றும் கமல் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், சூர்யா மற்றும் அஜித் வருவார்களோ என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தனுஷ், சிம்பு ஆகியோர் நிச்சயமாக பங்கேற்பார்கள் என வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிகழ்ச்சி நடந்தால், அது இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய விழாவாகப் போகிறது. விஜயின் அரசியல் வருகைக்கும், சினிமா பயணத்திற்கும் இடையிலான பாலமாக இந்த ஆடியோ வெளியீடு அமையும். மேலும், படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பாக்ஸ் ஆபிஸில் சாதனையையும் உருவாக்கும் என கணிக்கப்படுகிறது.

You Might Also Like

முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!

எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு

வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??

உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்

இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்

TAGGED:#Jananaayagan#Politics#Vijay#அரசியல்#விஜய்#ஜனநாயகன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு நீரும் வராது: சௌமியா அன்புமணி எச்சரிக்கை!

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?