உடுமலை: நிவாரண உதவி வழங்கல்… திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டார் டிரான்ஸ்போர்ட் வாட்ஸ் ஆப் குழு , TN 78 வாட்ஸ் ஆப் குழு , கே. எஸ் டி வாட்ஸ் ஆப் குழு இணைந்து கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரத்திற்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 க்கு மேற்பட்ட பரிதாபமாக உயிர் இழந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமென வாட்ஸ் ஆப்பில் பதிவிடப்பட்டது.
இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் சுமார் 40, 886 ரூபாய் தொகையை இன்று கேரளா மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உடுமலை பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் நிதி உதவி அளிக்க முன் வர வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது