தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் குளிர்ந்த காற்று வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெயில் இன்றி மேகமூட்டத்துடன் இதமான காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், மாரியம்மன் கோவில், புதிய பேருந்து நிலையம், மருத்துவ கல்லூரி சாலை, வல்லம், பூதலூர், செங்கிப்பட்டி, ஒரத்தநாட, சூரக்கோட்டை, மருங்குளம், குருங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.