புதுடெல்லி: ஃபாக்ஸ்கான் தனது தமிழ்நாடு ஆலையில் ஐபேட்களை அசெம்பிள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தமிழக அரசுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஃபாக்ஸ்கான் ஒரு தைவானிய நிறுவனம். ஃபாக்ஸ்கான் ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொருட்களை தயாரித்து வழங்குகிறது.
இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் ஆலை உள்ளது. இந்த ஆலையில், ஃபாக்ஸ்கான் ஆப்பிள் ஐபோன்களை அசெம்பிள் செய்கிறது. இந்நிலையில், அதே ஆலையில் ஐபேட்களை அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது.
இது ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான ஆப்பிள் போன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் சீனாவை முழுமையாக சார்ந்திருக்காமல் இந்தியா, வியட்நாம் என பல்வேறு நாடுகளில் சொந்தமாக விநியோக மையங்களை உருவாக்கி வருகிறது.
இதன் விரிவாக்கமாக, தமிழகத்தில் ஆப்பிள் அசெம்பிளி ஆலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் துவங்கியது. மேலும், பெங்களூருவில் புதிய பெரிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.