By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நடுக்கடலில் பயங்கர தீ… பிலிப்பைன்ஸ் படகு விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு
    1 Min Read
    ரஷ்யாவுக்கு பெரும் இழப்பா? 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பலி என மேற்கத்திய உளவுத்துறை தகவல்
    1 Min Read
    பள்ளியில் வாய் தகராறு… கத்திக்குத்தாக மாறிய அதிர்ச்சி சம்பவம்: 2 பேர் படுகாயம்
    1 Min Read
    ரூ.66.91 கோடி போர் விமான கொள்முதல் முறைகேடு? கோத்தபய ராஜபக்சேவிடம் 5 மணி நேர விசாரணை
    1 Min Read
    தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க 5 மணி நேர பரோல்… சின்மயி கிருஷ்ண தாஸின் உணர்ச்சிகரமான தருணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ‘மிரட்டலுக்கு ஈரான் அடிபணியாது’… அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பெசெஷ்கியான் கடும் எச்சரிக்கை
    1 Min Read
    தமிழகத்திற்கு ரயில்வே மெகா திட்டங்கள்! ரூ.10,021 கோடியில் 5 புதிய பன்முகப் பாதைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    1 Min Read
    7 வெளிநாட்டினர் வழக்கில் திருப்பம்: தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை என என்ஐஏ விளக்கம்
    1 Min Read
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உயிருக்கு உலைவைக்கும் நொறுக்குத்தீனிகள்..!
    1 Min Read
    உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி தரும் பன்னீர்!
    1 Min Read
    கொழுப்பு கட்டிகளை இயற்கை முறையில் கரைக்கும் வழிமுறைகள்
    2 Min Read
    ‘அன்புப் பெரியோர்களே…’ என்ற குரல் ஓய்ந்தது! சாலமன் பாப்பையா மறைவால் தமிழகம் சோகம்
    1 Min Read
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: 6,000 போலீசார் பாதுகாப்பு! கூடுதலாக 1,000 பேருந்துகள் இயக்கம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சுற்றுலா வேட்கை தணிக்கும் அலிபாக் கடற்கரை!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > சுற்றுலா வேட்கை தணிக்கும் அலிபாக் கடற்கரை!
சுற்றுலா

சுற்றுலா வேட்கை தணிக்கும் அலிபாக் கடற்கரை!

Nagaraj
Last updated: August 22, 2026 6:38 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

ராய்காட்: மஹாரஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள அலிபாக் நகரம் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும். இது மும்பை மெட்ரோவுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அலி தோட்டப்பூங்காவை குறிப்பிடும்படியாக இது அலிபாக் என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான மா மற்றும் தென்னை மரங்களை இங்கு அலி நட்டதாக சொல்லப்படுகிறது.

அலிபாக்கின் நான்கு எல்லைப்புறங்களில் மூன்று கடல் நீரினால் சூழப்பட்டுள்ளதால் பல அழகிய கடற்கரைகளை இது பெற்றுள்ளது. இங்குள்ள எல்லா கடற்கரைகளுமே தென்னை மரங்களுடனும், பாக்கு மரங்களுடனும் காணப்படுவதால் ஒரு பாலைவனப்பிரதேச கடற்கரை போன்று வித்தியாசமான இயற்கை எழிலுடன் காட்சியளிக்கின்றன.

இயற்கை அதன் மிக அற்புதமான தோற்றத்துடன் களங்கமற்ற ஆதி அழகுடன் அலிபாக் கடற்கரையில் மிளிர்கிறது. இங்கு நீங்கள் சுவாசிக்கும் காற்று மாசற்ற தூய்மையுடன் காணப்படுகிறது. சுருக்கமாக அலிபாக் கடற்கரைகளை பூலோக சொர்க்கம் என்றே சொல்லலாம். தன் கருப்பு நிற மணற்பரப்பால் உங்களை திகைப்பூட்டும் அலிபாக் கடற்கரை ஒரு புறமிருக்க, கிஹிம் பீச் மற்றும் நகவான் கடற்கரைகள் வெள்ளியைப்போல் ஒளிரும் வெள்ளை மணலால் பயணிகளைக் கவர்கின்றன. இவை தவிர அக்‌ஷி கடற்கரை என்று அழைக்கப்படும் மற்றொரு கடற்கரையும் இங்குள்ளது.

அலிபாக் ஒரு கடற்கரை நகரம் என்பதால் இங்கு கிடைக்கும் உணவு வகைகள் யாவுமே கடல் உணவு வகைகளாகவே உள்ளன. பாம்ஃபிரட் மற்றும் சுர்மை உணவுத்தயாரிப்புகளுடன் சொல் காதியும் இங்கு புகழ் பெற்ற உணவாக உள்ளது. நேசத்திற்குரிய துணையுடன் இன்பமாக, ஏகாந்தமாக தனிமையில் பொழுதைக் கழிப்பதற்கேற்ற இயற்கை ஸ்தலமாக அலிபாக் கடற்கரைப்பகுதி காணப்படுகிறது. பீச்சில் காலார நடப்பதற்கோ, கடலலைகளில் விளையாடுவதற்கோ அல்லது அமைதியாக சூரியன் கடலில் சென்று மறைவதை பார்த்து ரசிக்கவோ அலிபாக் பகுதி பொருத்தமான இடமாகும்.

அலிபாக் பகுதியில் எப்போதுமே விரும்பத்தக்க சிதோஷ்ண நிலை நிலவுகிறது. இங்கு அதிக உஷ்ணமோ அல்லது அதிக குளிரோ நிலவாமல் மிதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. இந்தியாவின் மற்ற பிரதேசங்களைப் போன்று இங்கு கோடைக்காலம் மிகுந்த வெப்பத்துடன் காணப்படுவதில்லை. கோடையில் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 36°C மட்டுமே காணப்படுகிறது.

மழைக்காலத்தில் இப்பிரதேசத்தின் அழகு ரசிக்கும்படியாக இருந்தாலும் சுற்றிப்பார்ப்பதற்கு சற்று சிரமமாக இருக்கலாம். இருப்பினும் அலிபாக் பகுதியை சுற்றிப்பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஏற்ற காலம் என்றால் அது குளிர்காலம் தான். அச்சமயத்தில் சீதோஷ்ண நிலை மிக இதமாகவும் மிதமாகவும் சூழல் இனிமையாகவும் காணப்படுகிறது. இது உங்கள் பயண அனுபவத்தை மறக்க முடியாத மிகவும் இனிமையான அனுபவமாக மாற்றும். கொண்டாட்ட காலமான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தருணங்களில் இங்கு வருகை தருவதும் சிறந்தது.

You Might Also Like

கனடாவின் அழகை கவர்ந்திழுக்கும் முக்கியமான இடங்கள்

சென்னை-மதுரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்படுமா? பயணிகள் அதிர்ச்சி!

நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்

மேற்கத்திய பயணிகளை வெகுவாக கவரும் தெரஸா தீவு!

ஒரு நாள் உல்லாச பயணத்திற்கும் சிறந்த இடம் முதுமலை!

TAGGED:alibag beachNatureSeafoodTravelwinterஅலிபாக் கடற்கரைஇயற்கைகடல் உணவுகுளிர்காலம்சுற்றுலா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?