By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரான் மோதலில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    ஈரான் போரில் வெற்றி பெற்றால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறையும்: டிரம்ப்
    1 Min Read
    லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
    1 Min Read
    விமானத்தில் பயணி அட்டகாசம்: சக பயணிகளை தாக்கியதால் விமானம் பால்டிமோருக்கு திருப்பிவிடப்பட்டது
    2 Min Read
    போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா
    3 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மோடி விழாவுக்கு ‘புக் மை ஷோ’வில் இலவச பதிவு: ஒரு மணி நேரத்தில் அனைத்து இடங்களும் நிரம்பின
    1 Min Read
    ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ.2.22 லட்சம்: 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
    1 Min Read
    பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு
    1 Min Read
    ரூ.1,322 கோடி கடன் மோசடி புகார்: ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா மீது சிபிஐ வழக்கு
    1 Min Read
    போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து பல லட்சம் மோசடி: இளம்பெண் கைது
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பல்வேறு நோய்களை சரிசெய்யும் நட்சத்திர சோம்பு!
    1 Min Read
    காலையில் போட்ட பெர்மியூம் மாலையில் வரை மணக்க வேண்டுமா?
    2 Min Read
    புதிய ட்ரெண்ட்டாக வலம் வரும் ஜங்க் ஜூவல்லரி!
    2 Min Read
    செப்டம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க ஆணையாளர் சமீரன் உத்தரவு
    2 Min Read
    தினமும் உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தஞ்சையில் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்களில் முக்கியமான ஒன்று
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சுற்றுலா > தஞ்சையில் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்களில் முக்கியமான ஒன்று
சுற்றுலா

தஞ்சையில் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்களில் முக்கியமான ஒன்று

Nagaraj
Last updated: August 10, 2026 5:14 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தஞ்சை என்றால் “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்றும் பொருள்படும். அதற்காக நெற்களஞ்சியம் மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். இன்னும் இருக்கு… சொல்ல… சொல்ல நிறைய இருக்கு. கட்டிடம், கலை, கதை, கவி என்று தஞ்சையின் மண், கல் கவிப்பாடும். நெல் வயலை தொட்டு வரும் காற்றும் இசைப்பாடும்.

எத்தனை பெருமை, சுற்றிப்பார்க்க எத்தனை இடம் என்று மனம் ரம்யமாகும். மண்ணுக்கே வாசனை கொடுக்கும் ஊர். மணம் மண்ணுக்கு மட்டுமில்லை இங்கு வரும் அனைவருக்கும்தான். சுற்றுலாப்பயணிகளுக்கு தெரிந்த பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா, மணிமண்டபத்திற்கு அடுத்தப்படியாக மனதை அள்ளும் தென்னக பண்பாட்டு மையம் மிக முக்கியமான இடமாகும்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அமைத்தது. 25 ஏக்கர் பரப்பளவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அந்தமான், லட்சத் தீவு ஆகியவற்றின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுநெடுவென்று விண்ணை தொடுமோ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு வனப்பு மிக்க தலையாட்டி பொம்மைகள் வாங்க, வாங்க என்று அழைக்கும். சுமார் இருபந்தைந்து அடி உயரம் இருக்கும். கண்ணாடி இழை மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்டவை இவை. நுழைவாயிலின் இடது புறம் நம்மோட பரிணாம வளர்ச்சியை சித்தரிக்கும் பொம்மைகள்.History

நமது நாட்டின் கலை மட்டுமின்றி உலகின் உள்ள பராம்பரிய கலைகளை பரப்புவதற்காக தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்திற்கு ஏராளமான கலைஞர்கள் வந்து செல்கின்றனர். இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் கலைகளை கொண்ட நுழைவாயில் கதவுகள் பிரமிக்க வைக்கிறது. 3 ஆயிரம் கலைப்பொருட்கள் உள்ள கலைக்கூடம், கண்காட்சி கூடம், கலைக் கூடத்தில் இருந்த வர்ண ஓவியங்கள், கருங்கல் சிற்பங்கள், கண்ணாடி சிற்பங்கள், மைய மண்டபத்தில் இயற்கை வர்ணங்களால் வரையப்பட்டுள்ள கேரள முரல் ஓவியம் பார்க்க, பார்க்க திகட்டாத இனிப்பு போல் இருக்கிறது.

இந்த ஒவியம் மகாபாரத ராமாயண இதிகாசக் கதைகளிலிருந்து வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த அற்புதமான சுற்றிப்பார்க்க சிறந்த இடமாக தென்னகப் பண்பாட்டு மையம் உள்ளது.

இங்கு, கலை விழாக்கள், பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விருது வழங்குதல், நாட்டுப்புற கலை விழா, கலைப் போட்டி, கலைக்கண்காட்சியும் நடத்தப்படுகிறது. வாங்க… வந்து பாருங்க. தென்னப்பண்பாட்டு மையம் உங்களை மயக்கி விடும்.

You Might Also Like

கனடாவின் அழகை கவர்ந்திழுக்கும் முக்கியமான இடங்கள்

சென்னை-மதுரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்படுமா? பயணிகள் அதிர்ச்சி!

மேற்கத்திய பயணிகளை வெகுவாக கவரும் தெரஸா தீவு!

ஒரு நாள் உல்லாச பயணத்திற்கும் சிறந்த இடம் முதுமலை!

இயற்கை எழிலுக்கு பிரசித்தி பெற்று கபினி பிரதேசம்!!

TAGGED:Awecoconut cultural centreexhibition hallSculpturestourismகண்காட்சி கூடம்சிற்பங்கள்சுற்றுலாதென்ன பண்பாட்டுபிரமிப்புமையம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?