மும்பை: இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, தனது கணவரும் பாலிவுட் முன்னணி நடிகருமான ரன்வீர் சிங் மற்றும் மகள் துவாவுடன் மும்பையில் உள்ள தனது புதிய ஆடம்பரமான பங்களாவில் குடியேறியுள்ளார். மும்பை கடற்கரையை நோக்கிய 4 மாடிகள் கொண்ட பிரமாண்டமான இந்த பங்களாவின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய்.

இந்த வீடு ஷாருக்கானின் மன்னத் பங்களா மற்றும் சல்மான் கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ளது. ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் 16-வது மாடியில் இருந்து 19-வது மாடி வரை பல மாடிகள் கொண்ட ஆடம்பரமான பங்களாவை வாங்கியுள்ளனர்.
இது 11,266 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இது தவிர, தீபிகா படுகோன் 2021-ல் அலிபாக் நகரில் ரூ.22 கோடிக்கு பங்களாவை வாங்கினார். தற்போது ஷாருக்கானின் மன்னத் பங்களாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், அவரும் அவரது குடும்பத்தினரும் மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.