வாஷிங்டனில் அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல்களைத் தடுக்க 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில், எதிரிகளை வானிலேயே அழிக்கும் வகையில் ‘கோல்டன் டோம்’ திட்டம் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் அலாஸ்கா, புளோரிடா, ஜியார்ஜியா மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர் கூறினார். இதே நேரத்தில், கனடாவும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் கனடா பிரதமரின் அலுவலகம் இதுகுறித்து எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.பென்டகனும், இந்த திட்டத்துக்கான ஏவுகணைகள், ரேடார்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் சென்சார்கள் உள்ளிட்ட உபகரணங்களை பரிசோதித்து தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட சவால்கள் டிரம்ப் எதிர்கொள்கிறார்.
எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த திட்ட ஒப்பந்தத்துக்காக மோதலில் முன்னணியில் இருக்கிறது. பல்வேறு தடைகள் இருந்தாலும், 2029 ஜனவரிக்குள் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதே டிரம்பின் இலக்காகும்.இந்த திட்டம் அமெரிக்காவின் பாதுகாப்பை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
எதிரிகளின் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் வான்வழி பாதுகாப்பு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும்.புதிய தொழில்நுட்பம் சார்ந்த இந்த திட்டம் அமெரிக்காவின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கியமான முயற்சியாகும். இந்த திட்டம் செயல்பட்டால், எதிரிகளின் ஏவுகணை தாக்குதல்களை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.டிரம்பின் செயல்பாடு நாட்டின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் வகையிலானதாக உள்ளது. இந்தப் புதிய நடவடிக்கை தொடர்பான மேலதிக விவரங்கள் எதிர்கால நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.