உதகை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று விடியற்காலை கனமழை பெய்தது. தேவாலாவில் அதிகபட்சமாக 186 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூடலூர், பந்தலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு முதல் பெய்யத் தொடங்கிய மழை விடியற்காலையுடன் ஓய்ந்தது. கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது.
தேவாலாவில் அதிகபட்சமாக 186 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார்.
உதகை, குந்தா தாலுகாக்களில் கனமழை பெய்தாலும் விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்றனர். மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை வரை பதிவான மழையளவு:-
கூடலூர் 148, பந்தலூர் 135, சேரங்கோடு 124, அவிலாஞ்சி 110, பாடந்துறை 90, ஓவேலி 88, அப்பர் பவானி 69, செருமுள்ளி 69, நடுவட்டம் 52, கிளன்மார்க்கன் 40,
குந்தா 22, எமரால்டு 21, உதகை 18.8, கோத்தகிரி 14, கோடநாடு 13, கீழ் கோத்தகிரி 10, கெத்தை 8, குன்னுர் 8, கேத்தி 7, பர்லியார் 3 மி. மீ., மழை பதிவாகியுள்ளது.