புதுடில்லி: சட்ட விரோத குடியேற்றங்கள் தடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் அயல்நாட்டவர்களுக்கு உதவுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் பிரச்னை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது என்றார்.
அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.