April 28, 2024

இந்தியாவில் வசிப்பதற்கு அதிகம் செலவாகும் நகரங்கள்

உலகம்: இந்தியாவில் வசிப்பதற்கு அதிகம் செலவாகும் நகரங்களில், மும்பை தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகில் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலை மெர்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதற்காக 5 கண்டங்களில் உள்ள 227 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, சீனாவின் ஹாங்காங் நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை 147வது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி 169வது இடத்திலும், சென்னை 184வது இடத்திலும் உள்ளன.

பெங்களூரு 189வது இடத்திலும், ஹைதராபாத் 202வது இடத்திலும், கொல்கத்தா 211வது இடத்திலும் உள்ளன. மேலும், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் சூரிச் ஆகியவை இடம், வீடு, போக்குவரத்து, உணவு, உடை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் அதிக செலவு செய்யும் நகரங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தியாவில் மும்பை முதலிடத்தில் உள்ளது. சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. மேலும், மும்பையை விட மற்ற நகரங்களில் செலவு 50 சதவீதம் குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!