சென்னை : ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி பிரச்னையில் ரசிகருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
2023ல் சென்னை ஈசிஆரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆக.12ல் மீண்டும் நடந்த நிகழ்ச்சிக்கு முறையான முன்னறிவிப்பு செய்யவில்லை என்றும் ரூ.10,000 டிக்கெட் எடுத்தும் வாகன நெரிசலால் நிகழ்ச்சியை காண முடியாததால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் எடுத்தும், நிகழ்ச்சியை பார்க்க முடியாதவருக்கு இழப்பீடு வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ரூ.10 ஆயிரம் டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு, ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், வழக்கு செலவாக ரூ.5,000 வழங்க ஏசிடிசி நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.