May 26, 2024

திகில் படத்தில் நடிக்கும் சந்தானம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம், பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் சந்தானம் ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்துள்ள சுரபி கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், ரெடின் கிங்ஸ்லி, மோட்டா ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டிடி ரிட்டர்ன்ஸ் போஸ்டர் ஆர்.கே. எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு OFRO இசையமைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என டைட்டில் வைத்துள்ளனர் படக்குழு.

மேலும், இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!