உத்தரபிரதேசம்: உத்தரபிரேச மாநிலத்தில் பேக்ஐடியை பயன்படுத்தி 23 வயது இளைஞர் 700க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துஷார் சிங் பிஷ்ட் என்ற 23 வயதான இளைஞர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் recruiter ஆக பணியாற்றி வந்துள்ளார். பகலில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த துஷார் மற்ற நேரங்களில் பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பதையே குறிக்கோளாக வைத்து 700க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.
இதற்காக பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவரின் படங்களை திருடி snapchat மற்றும் bumble போன்ற தளங்களில் கணக்கு தொடங்கி தன்னை ஒரு அமெரிக்காவை சேர்ந்த மாடலாக காட்டிக்கொண்டுள்ளார்.
18-30 வயது பெண்களை குறிவைத்து நட்பாக பழக தொடங்கிய இவர், பின்னர் அவர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் நிர்வாண படங்களை அனுப்ப கோரியுள்ளார். அவருடன் பழகி வந்த பெண்களும் அவர் கேட்டது போல் படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளனர்.
முதலில் இதை ஒரு பொழுதுபோக்கிற்காக செய்து வந்த துஷார், அதன் பின்னர் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சேமித்து வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்தால் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 13, 2024 அன்று டில்லி பல்கலைக்கழகத்தில் 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் சைபர் காவல் நிலையத்தில் இந்த நபர் மீது புகார் அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் bumble மூலம் அமெரிக்க மாடலாக தன்னை அந்த மாணவியிடம் அறிமுகம் செய்து பழக தொடங்கியுள்ளார்.
அந்த மாணவியின் நம்பிக்கையை பெற்று, வாட்ஸ்அப் மற்றும் snapchat மூலம் பழக தொடங்கியுள்ளார். பின்னர் துஷார் அந்தரங்க படங்களை அனுப்புமாறு கேட்டபோது மாணவியும் அனுப்பியுள்ளார். மாணவி நேரில் சந்திக்க பலமுறை அழைத்த போதும் மறுத்த துஷார், அந்தரங்க படங்களை வெளியிடுவதாக கூறி இவரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
முதலில் பயந்த மாணவி சிறிய அளவிலான தொகையை துஷாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் துஷார் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டவே, அந்த மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், டெல்லியில் வைத்து துஷாரை கைது செய்துள்ளனர்.
இவர் பயன்படுத்திய செல்போன், 13 கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி காவல்துறையினர் நடத்திய விசரணையில் இதே போல் |பம்பிள் செயலி மூலம் 500 பெண்களையும் ஸ்னாப்சாட், வாட்சப் மூலம் 200 பெண்களையும் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.