May 19, 2024

கர்நாடக சட்டமன்றத்தை பசு கோமியத்தால் பரிகாரம் செய்த காங்கிரஸார்..

கர்நாடக சட்டமன்ற வளாகத்தை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பசு கோமியத்தால் பரிகாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில், கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி, ஆளும் பா.ஜ.க.வை தோற்கடித்து, ஆட்சியை பிடித்தது. மேலும் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் பதவியேற்றது

இந்நிலையில் சட்டசபை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரமுகர்கள் மாட்டு கோமியம் வைத்து சட்டசபை வளாகத்தில் பூஜை செய்தனர்.

பாஜகவின் ஊழலால் கர்நாடக சட்டப்பேரவையின் புனிதம் கெட்டுவிட்டதாகவும், அதனால்தான் பசு கோமியம் வைத்து வழிபடுவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!