ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கருங்கடல் கப்பல் போக்குவரத்து, தானியங்கள் மற்றும் எரிசக்தி ஏற்றுமதி, தாக்குதல்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலக நாடுகளின் கவனம் மீண்டும் ரஷ்யா–உக்ரைன் போர் மீது திரும்பியுள்ள நிலையில், இந்தியாவின் சமரச முயற்சி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
