காசா: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த தாக்குதல் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுவது குறித்து மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இதற்கிடையே பிராந்திய அளவில் போர் பதற்றத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
