ஜெருசலேம்: காசா அமைதி திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தூதர் ஜாரெட் குஷ்னர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார்.
இதற்கு முன்னதாக எகிப்தின் எல்-அலமைன் நகரில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் கலீல் அல்-ஹய்யாவை குஷ்னர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவதுடன், எதிர்கால பாலஸ்தீன நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கக் கூடாது என்பது அமெரிக்க தரப்பின் முக்கிய கோரிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது.
காசா அமைதி திட்டத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில், நெதன்யாகுவிடம் திட்டத்தை முன்னெடுக்க அழுத்தம் கொடுக்க குஷ்னர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
