பாங்காக்: தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்கிறது. இதற்கிடையில், ஜூன் 15 அன்று தாய்லாந்து பிரதமர் பேதோங்தான் ஷினாவத்ராவுக்கும் கம்போடிய முன்னாள் பிரதமரும் செனட் தலைவருமான ஹன் சென்னுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் கசிந்தது.
தாய்லாந்து இராணுவத் தலைவரை அவமதிக்கும் வகையில் அரசியலமைப்பிற்கு முரணான கருத்துக்கள் உரையாடலில் இடம்பெற்றதாகக் கூறி, ஷினாவத்ராவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

இது தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை 1-ம் தேதி ஷினவத்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், ஷினவத்ரா பதவியில் தொடரும் திறனை இழந்துவிட்டதாகக் கூறி, அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று அவரை பதவி நீக்கம் செய்தது.