வாஷிங்டனில் இருந்து கிடைத்த தகவலின்படி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியிலிருந்து விலகிய பைடன், உடல்நலம் குறைவால் மருத்துவ கவனிப்பில் உள்ளார்.

அவரது உடல்நிலை சமீபத்தில் மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. டாக்டர்கள் இதை கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) என தெரிவித்துள்ளனர், இது மிகவும் தீவிர நிலையை குறிக்கிறது. பைடனும் அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பைடனின் குடும்பத்தினர், இது தீவிரமான வகைப் புற்றுநோயாக இருந்தாலும், முறையான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பைடன், இந்த நிலைமையால் வருத்தம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த அதிபர் டொனால்ட் டிரம்ப், பைடனுக்கு விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சமூக வலைதளத்தில் தனது வருத்தத்தைத் தெரிவித்து, பைடன் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்.