அமெரிக்கா: அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கடந்த 10ம் தேதி டெக்சாஸின் டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் நடந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். பின்னர், டல்லாஸ் போலீசார் இச்சம்பம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த கொலை வழக்கில் யோர்டானிஸ் கோபோஸ்-மார்டினெஸை சந்தேக நபராக சேர்த்து கொண்டனர். அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை இல்லாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் மீது குடியேற்றக் காவலும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சந்திர மௌலி நகமல்லையா (Chandra Mouli “Bob” Nagamallaiah), 50 வயது. அவர் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தியர். அமெரிக்காவில் டாலஸ்ஸில் உள்ள “டவுன்டவுன் சூட்ஸ்” என்ற மோட்டலை 2-3 ஆண்டுகளாக நிர்வகித்து வந்தார். அவர் மனைவி மற்றும் 18 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். யோர்டானிஸ் கோபோஸ்-மார்தினெஸ், அதே மோட்டலில் சந்திரமௌலியின் சக ஊழியராக வேலை செய்தவர்.
மோட்டலில் ஒரு வாஷிங் மெஷின் சேதமடைந்திருந்தது. சந்திரா அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று குற்றவாளியிடம் கூறினார். சந்திரமௌலி குற்றவாளியிடம் நேரடியாக பேசாமல், வேறொரு நபரை பேச வைத்ததால், கோபோஸ்-மார்தினெஸ் கோபமடைந்தார். பின்னர், சிறு வாக்குவாதமாக மாறியது. குற்றவாளி இடத்தை விட்டு சென்று, ஒரு மச்செட்டி எடுத்து வந்தார். CCTV கேமராவில் இது பதிவாகியுள்ளது. சந்திரா தப்பி ஓடி மோட்டல் அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு அவரது மனைவி மற்றும் மகன் இருந்தனர். குற்றவாளி அவரைத் தொடர்ந்து வந்து, அவர்களின் முன்னால் சந்திரமௌலியை குத்தி, தலை துண்டித்து கொன்றார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.