சீனா: டிராகனும் யானையும் ஒன்றிணைவது மிக முக்கியம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் நேற்று சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது பேசிய ஜி ஜின்பிங், “இந்தியாவும் சீனாவும் நண்பர்களாகவும் நல்ல அண்டை நாடுகளாகவும் இருப்பது மிக முக்கியம். சீனாவும் இந்தியாவும் மிகவும் நாகரிகமான இரண்டு நாடுகள். நாம் உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள். நண்பர்களாகவும், நல்ல அண்டை வீட்டாராகவும், டிராகனும் யானையும் ஒன்றிணைவது மிக முக்கியம்
சீன – இந்திய மக்களின் வாழ்க்கை, வளரும் நாடுகளின் ஒற்றுமை உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வரலாற்று பொறுப்பை இருநாடுகளும் இன்றிலிருந்து ஏற்றுக்கொள்கிறது” என்று தெரிவித்தார்.