பெல்ஜியம் : வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று கைதாகி உள்ள மெஹுல் சோக்ஸி உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் பெற முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வைர வியாபாரியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடியில் ஈடுபட்டு, நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற மெஹுல் சோக்ஸி, பெல்ஜியத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி பிணை பெற அவரது வழக்குரைஞர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.