சென்னை: தமிழகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தமிழகத்தில் பல புதிய தொழில்களை உருவாக்கவும் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.
இவர் கடந்த 27-ம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணம் சென்றடைந்தார்.
மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார். விமான நிலையத்தில், அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் மக்கள் திரளாக திரண்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீகர் ரெட்டி, சான்பிரான்சிஸ்கோவுக்கான இந்திய துணை தூதர் ஜெனரல், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்டோர் முதலமைச்சரை வரவேற்றதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.