அமெரிக்கா: இயேசு கிறிஸ்து தோற்றத்தில் ஏஐ படம் வெளியிட்டு மதத் தலைவர்கள் டென்ஷன் ஆனதால் சர்ச்சை படத்தை நீக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப். அது டாக்டர் வேடம் என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சர்ச்சை புகைப்படம் உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியதால், அந்த பதிவை டிரம்ப் நீக்கினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில், இயேசு கிறிஸ்து அணிவதைப் போன்ற வெண்ணிற அங்கி மற்றும் சிவப்பு நிற மேலாடையுடன் டிரம்ப் காட்சியளித்தார். மருத்துவமனையில் படுத்திருக்கும் ஒரு நபரின் நெற்றியில் கையை வைத்து அவர் அதிசயம் செய்வது போன்றும், பின்னணியில் அமெரிக்க தேசிய கொடி, சுதந்திர தேவி சிலை, கழுகு மற்றும் போர் விமானங்கள் இருப்பது போன்றும் அந்த ‘ஏஐ’ படம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே ஈரான் விவகாரத்தில் போப் லியோவுக்கும் டிரம்ப்பிற்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில் இந்தப் படம் வெளியானது. டிரம்ப்பை இயேசுவாக சித்தரித்ததற்கு மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சர்ச்சை புகைப்படம் உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியதால், அந்த பதிவை டிரம்ப் நீக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு புனிதமற்ற செயல் என்று பலரும் விமர்சித்தனர். 12 மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் படம் நீடிக்கவே, எதிர்ப்புகள் அதிகரித்ததால் நேற்றிரவு அந்தப் பதிவை டிரம்ப் நீக்கினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், ‘அந்தப் படத்தை நான் பதிவிட்டது உண்மைதான். ஆனால் என்னை நான் இயேசுவாகச் சித்தரிக்கவில்லை. என்னை நான் ஒரு டாக்டராகத்தான் நினைத்தேன். அந்தச் சிவப்பு நிற மேலாடையை ரெட் கிராஸ் அமைப்பின் அடையாளமாகக் கருதி, அவர்களுக்கு ஆதரவு தரும் வகையில் மருத்துவ ஊழியராகப் பதிவிட்டேன்’ என்றார்.