கனடா: ஷாக் கொடுத்த கனடா பிரதமர்… சீனாவில் தயாரிக்கப்படும் இலத்திரனியல் வாகனங்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் இலத்திரனியல் வாகனங்கள் அதிகம் உற்பத்தியாகும் நாடுகளில் ஒன்று சீனா என்பதும், இலத்திரனியல் வாகனங்களை சீனா அதிக அளவு ஏற்றுமதி செய்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்
இந்த நிலையில் சீனாவில் தயாரிக்கப்படும் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய 100% வரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’உலக சந்தையில் லாபம் பெறும் நோக்கில் சீனா நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் வாகனங்களுக்கு மட்டுமின்றி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் சீனா மற்றும் கனடா இடையே வர்த்தக பரிவர்த்தனை சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கனடா அரசிடம் சீனா பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.