ஜெனிவா: காசா, லெபனானில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், காசா மற்றும் லெபனானில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகளும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மத்திய கிழக்கில் ஒவ்வொரு மணி நேரமும் மோதல்கள் மோசமடைந்து வருவதாகவும், அதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸின் வெறுக்கத்தக்க செயல்களை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.