லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் பாதியிலேயே திரும்பியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் காரணம் தெரிந்தவுடன் தலையில் அடித்துக் கொண்டனர். என்ன விஷயம் தெரியுமா?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் சீனா புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பியுள்ளது.
சீனாவுக்கு செல்லாமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு விமானம் திரும்பியதால் பயணிகள் அச்சமடைந்தனர். விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருக்குமோ. அதனால் விமானம் திருப்பப்படுகிறது என பயணிகள் மத்தியில் பேச்சு எழுந்தது.
ஆனால் காரணம் தெரிந்தவுடன் பயணிகள் கோபம் அடைந்தனர். என்ன காரணம் என்றால் பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதான் விமானியிடம் பாஸ்போர்ட் இல்லையென தெரிந்ததாம்.
இதனால், திரும்பி சான் பிரான்ஸிஸ்கோ வந்த விமானம், புதிய விமானிகள் குழுவினருடன் மீண்டும் சீனா புறப்பட்டுச் சென்றுள்ளது. தங்கள் நேரத்தை வீணடித்த விமான நிறுவனம் மீது பயணிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.