சீனா: சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு 2 பாண்டா கரடிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறிதத்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் கூறுகையில் நட்புறவு தூதர்களாக அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
சீனாவின் செங்டு நகரில் இருந்து அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையத்துக்கு பாண்டா எக்ஸ்பிரஸ் என்ற ஃபெட்எக்ஸ் போயிங் விமானம் மூலம் இரண்டு பாண்டா கரடிகள் கொண்டுவரப்பட்டன.
வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் 30 நாட்கள் தனித்து வைக்கப்பட்டு பின்னர் மக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும்.
பாண்டா கரடிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் அவை சாப்பிடுவதற்குப் போதிய மூங்கில்கள் வைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.