திருவண்ணாமலை ; க்யூ ஆர் கோடு வழங்க மறுப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்கள் இருந்தும் க்யூ ஆர் கோடு வழங்க மறுப்பதாக கூறி 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், க்யூ ஆர் கோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.