சென்னை: பச்சைப்பயறு கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் ஹெக்டேரில் பச்சைப்பயறு சாகுபடி செய்யப்படுகிறது. ஹெக்டேருக்கு சுமார் 600 கிலோ வீதம் ஒட்டுமொத்தமாக 1.20 லட்சம் டன் பச்சைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அதில் 1440 டன் அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்வது எந்த வகையில் நியாயம்?
அதேபோல், ஒரு ஏக்கருக்கு 240 கிலோ விளைச்சல் கிடைக்கும் நிலையில், அதில் 155 கிலோவை மட்டும் கொள்முதல் செய்வது எப்படி நியாயமாகும்?தமிழ்நாட்டில் கடந்த 2021-22ஆம் ஆண்டில் 4250 டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டது.
2022-23ஆம் ஆண்டில் இது 12,605 டன்களாக அதிகரித்தது. ஆனால், கடந்த ஆண்டில் 1,860 டன்களாகவும், நடப்பாண்டில் 1440 டன்களாகவும் குறைக்கப்பட்டு விட்டதை ஏற்க முடியாது. இதைத் தடுக்க இனிய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்குஅதிகரிக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அரசே பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.