கவுகாத்தி: முதல்வர் திட்டவட்டம்… அசாம் மாநிலத்தில் வரும் 2041-ம் ஆண்டிற்குள் முஸ்லிம் இன மக்கள் பெரும்பான்மையாக இருப்பர் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: மாநிலத்தில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் இந்துக்களின் மக்கள் தொகை 16 சதவீதம் மட்டுமே அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு 10 ஆண்டு கால கட்டத்தில் முஸ்லிம் இன மக்கள் தொகை 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2041-ம் ஆண்டிற்குள் அவர்கள் பெரும்பான்மையினத்தவராக மாறுவார்கள். இந்த அதிகரிப்பை கட்டுப்படுத்த தனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போதைய புள்ளி விவரப்படி அசாமின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்களாக மாறிவிட்டனர். வரும் 2041-ல் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட மாநிலமாக மாறும். இதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.