இன்றைய காலத்தில் நீரிழிவு (Diabetes) நோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த, மருந்துகளோடு உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நாம் தினமும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்கள் மிகவும் முக்கியம்.
உணவில் உள்ள கொழுப்புகள், உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. மேலும் வைட்டமின் A, D, E, K ஆகியவற்றை உறிஞ்ச உதவுகின்றன. ஆனால் எல்லா எண்ணெய்களும் ஆரோக்கியம் தராது. தவறான எண்ணெய்களை அதிகம் பயன்படுத்தினால், நீரிழிவு நிலை மோசமாகும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைத்து, சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவும். ஆனால் ஒமேகா-6 அதிகம் உள்ள எண்ணெய்கள், உடலில் வீக்கம் அதிகரித்து, நீரிழிவு அபாயத்தை உயர்த்தும். அதனால், நீரிழிவு நோயாளிகள் எண்ணெய்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
நல்லது தரும் எண்ணெய்கள்
- அரிசி தவிடு எண்ணெய் – இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
- கடுகு எண்ணெய் – அழற்சி எதிர்ப்பு, இதயம் ஆரோக்கியம்.
- எள் எண்ணெய் – வைட்டமின் E, சர்க்கரை கட்டுப்பாடு.
- தேங்காய் எண்ணெய் (மிதமாக) – பசியை குறைத்து எடையைக் குறைக்கும்.
- நிலக்கடலை எண்ணெய் – MUFA, PUFA நிறைந்தது.
- சூரியகாந்தி எண்ணெய் – கெட்ட கொழுப்பு குறைக்கும்.
தவிர்க்க வேண்டியவை
- சுத்திகரிக்கப்பட்ட (Refined) எண்ணெய்கள்
- தரமற்ற நெய் அல்லது செயற்கை கலவை நெய்
- அதிக ஒமேகா-6 உள்ள எண்ணெய்கள்
மிக முக்கியமாக, எண்ணெய் எது இருந்தாலும் மிதமாகப் பயன்படுத்த வேண்டும். மேலும் குளிர் அழுத்தப்பட்ட (Cold-pressed) எண்ணெய்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.