By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை
    1 Min Read
    ரம்பூட்டான் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்
    1 Min Read
    நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: திமுக நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைப் பாதுகாக்க நினைக்கும் திமுக அரசு: கண்டனப் போராட்டம் அறிவிப்பு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > திமுக நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைப் பாதுகாக்க நினைக்கும் திமுக அரசு: கண்டனப் போராட்டம் அறிவிப்பு
அரசியல் செய்திகள்

திமுக நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைப் பாதுகாக்க நினைக்கும் திமுக அரசு: கண்டனப் போராட்டம் அறிவிப்பு

Nagaraj
Last updated: September 5, 2025 2:56 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை : கிட்னி திருட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து, திமுக நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைப் பாதுகாக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து திருச்சியில் 9ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்குது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில், திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றதாக, தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடியா திமுக ஆட்சி பதவியேற்றது முதல் நெசவாளர்கள், குறிப்பாக விசைத்தறித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அதிக அளவு விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நெசவு வேலை இல்லாததால், புரோக்கர்கள் ஏழை விசைத்தறித் தொழிலாளர்களுடைய வறுமையைப் பயன்படுத்தியும், இலவச மருத்துவம் என்ற பெயரிலும், விசைத்தறித் தொழிலாளர்களை குறிவைத்து

போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற இந்த மோசடியை கொடூரமான செயல் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது.

மனித உறுப்பு மாற்று சட்டத்தை மீறிய புரோக்கர்கள், போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி இந்த கிட்னி திருட்டை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மற்றும் மருத்துவத் துறையின் மீதான நம்பிக்கையின்மையை இது வெளிப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற எனது எழுச்சிப் பயணத்தில், மணச்சநல்லூருக்குச் சென்றபோது கிட்னி திருட்டுபற்றி பேசினேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன், கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளேன்.

ஏழை விசைத்தறித் தொழிலாளர்களிடமிருந்து கிட்னி திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், திமுக நிர்வாகிக்கு சொந்தமான இந்த மருத்துவமனையின் மீதும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீதும், சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீதும், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, கிட்னி திருட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து, திமுக நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைப் பாதுகாக்க நினைக்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 9.9.2025 – செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், `சமயபுரம் நால்ரோடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை அருகில்’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ. பரஞ்ஜோதி முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பலதரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிக்கும் வாக்குவாதம்

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 9 மாநகராட்சிகளில் பாஜக வெற்றி

ஆம்ஆத்மியின் 7 எம்.பி.க்கள் இணைவது ஏற்பு – பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு

லடாக் புதிய 5 மாவட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பு

மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?

TAGGED:AIADMKAnnouncementProtestTrichyஅதிமுகஅறிவிப்புகண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?