சென்னை: பிரண்டை துவையல் செய்வது இவ்வளவு சுலபமா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டு போய் விடுவீர்கள். இதோ உங்களுக்காக அதன் செய்முறை.
தேவையான பொருட்கள் :
பிரண்டை – 3/4 கப்
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – தேவையான அளவு
இஞ்சி – 1/2 துண்டு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் துருவியது – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :முதலில் பிரண்டையைக் கழுவி அதன் தோலை சீவிக்கொள்ளுங்கள். பிரண்டை கையில் பட்டால் அரிக்கும். எனவே கவனமுடன் செய்யுங்கள். தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். தேவையான மற்ற பொருட்களையும் தயார் செய்துகொண்டு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பைப் போட்டு வதக்குங்கள்.
பொன்னிறமாக வந்ததும் காய்ந்த மிளகாய், இஞ்சி என ஒவ்வொரு பொருளாக சேர்த்து வதக்குங்கள். அவற்றை தனியாக தட்டில் வைத்து ஆற வையுங்கள். பின் பிரண்டையை வதக்கிக்கொள்ளுங்கள். சற்று சுருங்கும் அளவு வதக்குங்கள். பின் அதையும் ஆற வைத்து மிக்ஸியில் மொத்தமாக சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதிலேயே உப்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் பிரண்டை துவையல் தயார்.