தஞ்சாவூர்: மத்திய அரசு ஆயுள் காப்பீட்டு பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்ததை வரவேற்று தஞ்சாவூரில் எல்ஐசி முகவர்கள் இனிப்பு வழங்கினர்.
மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்திருந்தது, இதையடுத்து இன்று முதல் ஜிஎஸ்டி வரி திருத்தம் செய்து நடைமுறைக்கு வந்துள்ளது, இந்நிலையில் பொதுமக்கள் பெறும் ஆயுள் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது,
இதனையடுத்து எல்ஐசி பாலிசி மீதான வரி ரத்துசெய்ததற்கு நன்றி தெரிவித்து எல்ஐசி முகவர்கள் தஞ்சை கோட்ட எல்ஐசி அலுவலகம் முன்பு முகவர்கள், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளருக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர், பாலிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டுமென முகவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,
இந்நிகழ்ச்சியில் கிளையின் தலைவர் புகழேந்தி, மாநில செயலாளர் ராஜா தலைமையில் ஏராளமான எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டனர்.