புதுடெல்லி: இந்தியாவில் மாற்று சிகிச்சை பெறுபவர்களில் 10 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு பகிர்ந்துள்ள தரவுகளின்படி:
இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்களில் 10 பேரில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர். 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 18,378 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 42 ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைப் பெற்றுள்ளன. அதன்படி, நாட்டில் மொத்தம் 18,336 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களில் 1,851 (10%) பேர் வெளிநாட்டினர்.
டெல்லியில் அதிகபட்சமாக 1,445 வெளிநாட்டு பிரஜைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (116), மேற்கு வங்கம் (88), உத்தரப் பிரதேசம் (76), தெலங்கானா (61), மகாராஷ்டிரா (35), கர்நாடகா (15), குஜராத் (11), தமிழ்நாடு (3), மணிப்பூர் (1) ஆகிய மாநிலங்கள் உள்ளன. ) தரவுகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ”உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளில் பெரும்பாலானோர் அண்டை நாடுகளை சேர்ந்தவர்கள். குறிப்பாக, வங்கதேசம், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், உயிருடன் இருக்கும் நன்கொடையாளரிடமிருந்து உறுப்புகளை மாற்றுவதற்காக இந்தியாவுக்கு வருகிறார்கள்.
மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததாலும், அங்கு நல்ல மருத்துவ நிபுணர்கள் இல்லாததாலும் அவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்,” என்றார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷ் குப்தா கூறுகையில், “எங்கள் மருத்துவ மையத்தில் கல்லீரல் மாற்று நோயாளிகளில் 30 சதவீதம் பேர் வெளிநாட்டினர்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களும் உடல் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை செய்ய இங்கு வருகிறார்கள். அவர்களின் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கான செலவு பத்தில் ஒரு பங்கு ஆகும். வெளிநாடுகளில் இருந்து அதிகளவான நோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு இதுவே முக்கியக் காரணம்,” என்றார்.