தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று மதியம் திடீரென கனமழை பெய்தது. காலை முதல் வெயில் தாக்கம் அதிகம் இருந்து வந்த நிலையில் மதியம் பெய்த மழையால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் வெயில் தாக்கம் அதிகம் இருந்து வந்தது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் பிற பகுதிகளில் இருந்து தஞ்சைக்கு வரும் மக்கள் இந்த வெயிலினால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இரவு நேரத்தில் திடீர் திடீரென சில பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் இன்று மதியம் தஞ்சை நகர் பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகினர்.