புதுச்சேரி: புதுவையில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி பத்மா ஜெய்ஸ்வால், புதுவை ஐ.ஜி. அஜித் குமார் சிங்ளா, எஸ்எஸ்பி ஈஷா சிங் ஆகியோர் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார். புதுவையில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தின்போது, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் மைக்கைப் பிடுங்கி, பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க மறுத்து அதிரடியாக செயல்பட்டவர் எஸ்எஸ்பி ஈஷா சிங்.
இதனால் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.