சாலியமங்கலம்: சாலியமங்கலம் அருகே சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு மனிதசங்கிலி நிகழ்ச்சி நடந்தது.
300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சாலியமங்கலம் அருகே தஞ்சாவூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையான கோவிலூர் பகுதியில் சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் விழிப்புணர்வு, மனித சங்கிலி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது..
தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் வாண்டையார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய போதைப்பொருள் விழிப்புணர்வு, மனித சங்கிலி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சிக்கு தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆடலழகன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு, போதைப் பொருளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாப்பது தொடர்பான நாடகங்களை நடத்தி காட்டினார். மேலும் பொதுமக்களுக்கு போதை பொருள் மற்றும் வாகன ஓட்டுதல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், நாட்டு நலபணி திட்ட அலுவலர்கள், வட்டாரப் போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகள், அம்மா பேட்டை காவல் நிலைய காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.