சென்னை: குழந்தையின் சருமத்தை பாதுகாப்பதற்கு பல செயற்கை கிரீம் உள்ளது. இருப்பினும் குழந்தையின் தோலானது மிகவும் மென்மையானது. எனவே அவற்றை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் பலவகையான ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். குறிப்பாக அரிப்பு, எரிச்சல் போன்ற பலவகையான பிரச்சனைகளை கூட ஏற்படுத்திவிடும். எனவே நம் வீட்டில் இயற்கையான முறைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் எப்படி பாதுகாக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.
குழந்தையின் தோலை மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் பாதுக்காக்க பயத்தமாவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே குழந்தையின் சருமத்தை பாதுகாக்க, குழந்தையை குளிக்க வைக்கும் போது, சிறிதளவு பயத்தமாவு, சிறிதளவு பசும் பால் இரண்டையும் ஒன்றாக கலந்து, குழந்தையின் உடலில் தடவி நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வைத்தால், குழந்தையின் தோல் மற்றும் சருமம் இரண்டும் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் குறிப்பாக பொலிவுடனும் காணப்படும்.
உங்கள் குழந்தையின் தோல் நிறம் கருமையாக உள்ளதா? அப்படினா ..வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து நன்றாக ஊற வைத்து கொள்ளவும்.பின்பு இந்த எண்ணெய்யை குழந்தையின் உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்து ஓரு மணி நேரம் வரை வைத்திருந்து, பின்பு கடலை மாவு அல்லது பயத்தமாவு இரண்டில் ஏதேனும் ஒன்றை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தால், குழந்தையின் தோல் நிறம் வெண்மையாக மாறும்.
குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், குழந்தை வெளியே செல்லும்போது ஏதேனும் ஒரு சன் வேஸ்லினை குழந்தையின் தோலிற்கு பயன்படுத்தினால், குழந்தையின் தோல் மற்றும் சருமத்தை பாதுகாக்கலாம்.