By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
    டெல்லியில் ‘குவாட்’ மாநாடு: சர்வதேசப் போர் குறித்து இந்தியா தலைமையில் ஆலோசனை
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்
    2 Min Read
    பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?
    1 Min Read
    வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அவசர நேரத்தில் கைக் கொடுக்கும் திடீர் சட்னிப் பொடி
    1 Min Read
    சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்: கொடைக்கானலில் 4 முக்கிய இடங்களுக்கு மே 31 வரை நுழைவுக் கட்டணம் ரத்து
    2 Min Read
    தொப்பை இல்லாமல் அழகான இடுப்பழகை பெற கோர் எக்சர்சைஸ்
    2 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
    உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் உடற்பயிற்சி பற்றி தெரியுமா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வேட்பு மனு தாக்கல் செய்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இறங்கிய தஞ்சாவூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > வேட்பு மனு தாக்கல் செய்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இறங்கிய தஞ்சாவூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
அரசியல் செய்திகள்

வேட்பு மனு தாக்கல் செய்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இறங்கிய தஞ்சாவூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர்

Nagaraj
Last updated: April 7, 2026 2:45 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூா்: தஞ்சாவூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் சண்.ராமநாதன் தனது நகராட்சி மேயர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அண்ணாதுரை, பெரியார், கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தஞ்சை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 45-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சண். ராமநாதன். இவர் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தஞ்சை மாநகராட்சி மேயராக கடந்த 4-3-2022-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் தி.மு.க வேட்பாளராக சண். ராமநாதன் அறிவிக்கப்பட்டார்.

இதையொட்டி அவர் தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் சண்.ராமநாதன் தனது மேயர் மற்றும் 45-வது வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளை ராஜினாமா செய்தார். இதற்காக தனி தனி ராஜினாமா கடிதங்களை மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் வழங்கினார்.

மேயர் பதவி ராஜினாமா கடிதத்தில் பச்சை நிறத்திலும், கவுன்சிலர் பதவி ராஜினாமா கடிதத்தில் ஊதா நிறத்திலும் கையெழுத்து இட்டிருந்தார்.

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தனது மேயர் பதவியை சண். ராமநாதன் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது மாநகராட்சி நுழைவு வாயிலில் காவலாளியாக பணிபுரிந்த ரவிச்சந்திரன் (58) என்பவர் சண். ராமநாதனை பார்த்ததும் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டார். பதிலுக்கு காவலாளி ரவிச்சந்திரனை, சண் ராமநாதன் ஆரத்தழுவி, நான் மேயர் அலுவலகத்திற்கு வரும் போதெல்லாம் எனக்கு கதவு திறந்து விட்டு உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தீர்கள். அதனை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். உங்களை நான் என் குடும்பத்தில் ஒருவராக தான் பார்க்கிறேன். உங்களுக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன். அனைவருக்கும் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்‌ என்று கூறினார். இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலை, பெரியார் சிலை, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேளத்தாளங்கள் முழங்க ஏராளமான கூட்டணி கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

டி.கே.ஜி. நீலமேகம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி செந்தில் குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தபோது வேட்பாளருடன் இருந்தனர். வேட்பாளர் சண். ராமநாதன் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ நித்யாவிடம் வழங்கினார்.

வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த வேட்பாளர் சண். ராமநாதனுக்கு மலர் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் ஆற்றுப்பாலம் கலைஞர் அறிவாலயமான திமுக மத்திய மாவட்ட அலுவலகம் முன்பு சட்டமன்ற தேர்தல் அலுவலகத்தை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் இறைவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் து. செல்வம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மகேந்திரன், தேமுதிக சிவனேசன், திமுக நிர்வாகிகள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, மேத்தா, நீலகண்டன், கார்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக வேட்பாளர் சண். ராமநாதன் நன்றி கூறினார்.

பின்னர் திறந்த ஜீப்பில் தஞ்சை மாநகராட்சி 15,16,17 வார்டுகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வேட்பாளர் சண்.ராமநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் வண்டிப்பேட்டை, நாலு கால் மண்டபம், அய்யங்கடைத் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

You Might Also Like

தி.நகர் எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு: மக்களுக்கு ‘குக்கர்’ பரிசு வழங்கிய அமைச்சர் ஆனந்த்!

தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – தொல். திருமாவளவன் கோரிக்கை.”

இன்னும் சில எம்எல்ஏக்களும் தவெகவில் இணைவார்களா?

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா: தவெக-வில் இணைந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

“ஆட்சி மாறியும் அவலங்கள் தொடர்கின்றன!” – தமிழக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்

TAGGED:DMK candidateenthusiastic welcomefiling of nominationPeople's welcomeSan. RamanathanThanjavurஉற்சாக வரவேற்பு..!சண்.ராமநாதன்தஞ்சாவூர்திமுக வேட்பாளர்மக்கள் வரவேற்புவேட்புமனு தாக்கல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

அவசர நேரத்தில் கைக் கொடுக்கும் திடீர் சட்னிப் பொடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?